ஜனநாயக அந்தஸ்தை நாடு இழந்துவிட்டது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

வெள்ளி, 12 மார்ச் 2021 (14:21 IST)
வெளிநாட்டு நிறுவனத்தின் அறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டி, ஜனநாயக அந்தஸ்தை இந்தியா இழந்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 
 
அமெரிக்க அரசின் நிதியுதவி பெறும் 'ஃபிரீடம் ஹவுஸ்' என்ற தன்னார்வ அமைப்பானது, உலக நாடுகளில் நிலவும் ஜனநாயக சூழல் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 'இந்தியாவில் பிரதமா் நரேந்திர மோதி தலைமையிலான அரசு கடந்த 2014-ஆம் ஆண்டில் பொறுப்பேற்றதிலிருந்து அரசியல் உரிமைகளும் மக்களுக்கான சுதந்திரமும் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
 
அதை அடிப்படையாகக் கொண்டு, ஸ்வீடனின் வி-டெம் மையம், இந்தியாவின் அந்தஸ்தை 'உலகின் மிகப் பெரும் ஜனநாயகம்' என்பதிலிருந்து 'அரசியல் சார்ந்த ஜனநாயகம்' என்று குறைத்து மதிப்பிட்டுள்ளது.
 
இவை தொடா்பான செய்தியைத் தனது சுட்டுரைப் பக்கத்தில் வியாழக்கிழமை பகிர்ந்த ராகுல் காந்தி, 'ஜனநாயக அந்தஸ்தை இந்தியா இழந்துவிட்டது' என்று குறிப்பிட்டுள்ளார். நாட்டில் பேச்சு சுதந்திரத்தையும் கருத்து சுதந்திரத்தையும் மத்திய அரசு ஒடுக்கி வருவதாக ராகுல் காந்தி தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்