முக்கிய அணு ஆய்வு தளத்தை அழிப்பதற்கு பிரதிபலனாக, வடகொரியா மீதான அனைத்து பொருளாதார தடைகளையும் விலக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிகாரிகள் கோரியதால் இந்த சந்திப்பை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
ஆனால், அமெரிக்காவின் இந்த கூற்றை வடகொரியா மறுத்துவிட்டது. உறவுகளை மேம்படுத்த அமெரிக்கா உண்மையிலேயே விரும்புகிறதா என்பதில் கடைசி சந்திப்பு பெரும் சந்தேகத்தை தனக்கு ஏற்படுத்தியுள்ளதாக மிக சமீபத்திய உரையில் கிம் ஜாங் உன் தெரிவித்திருந்தார்.
மேலும், சரியான அணுகுமுறையோடும், பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிபந்தனைகளோடும் மூன்றாவது உச்சி மாநாட்டை அமெரிக்கா நடத்துமானால், இன்னொரு முறை முயற்சிக்க தயாராக இருக்கிறோம் என்றும் கிம் கூறியுள்ளார்.