செவ்வாயன்று, ஃபாமான்சின் நாவா 10 என்ற அந்த மீன்பிடி படகில் தீப்பிடித்து எரிந்து மூழ்க தொடங்கியது. தாய்லாந்தின் கோ அடாங் என்ற தீவிலிருந்து 13 கிமீ தூரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. அந்த இடத்தை ஆய்வு செய்ய கடற்படையினர் வந்தபோது, அந்த நான்கு பூனைகள் மரத்துண்டு ஒன்றில் தடுமாறி நின்று கொண்டிருந்ததைக் கண்டனர்.
"எனது கேமராவில் ஜூம் செய்து பார்த்தபோது ஒன்றிரண்டு பூனைகள் தலையை நீட்டிப் பார்ப்பதை என்னால் பார்க்க முடிந்தது." என கடற்படை வீரர்களில் ஒருவரான விச்சிட் புக்டீலன் தெரிவித்துள்ளார். பூனைகளைக் காப்பாற்றிய இந்த சம்பவம் குறித்த முகநூல் பதிவு 2,500 கமெண்டுகளை பெற்றதுள்ளது. இது அத்தனையும் அந்த கடற்படையினரை பாராட்டி வந்த கமெண்டுகள்.