எரிந்து கொண்டிருந்த கப்பலில் பூனைகளை காப்பாற்றிய கடற்படையினர்

வியாழன், 4 மார்ச் 2021 (23:54 IST)
தாய்லாந்து கடற்படை வீரர்கள் அந்தமான் கடலில் எரியும் கப்பலில் தனித்துவிடப்பட்ட நான்கு பூனைகளை மீட்டுள்ளனர்.
 
அந்த எரிந்து கொண்டிருந்த கப்பலில் இருந்து மனிதர்கள் ஏற்கனவே வெளியேறிவிடக் கடற்படை வீரர்கள் அந்த கப்பலில் எண்ணெய் கசிவு ஏதேனும் ஏற்படுகிறதா என்பதை சோதிக்கக் கப்பலுக்குள் சென்ற போது இந்த நான்கு பூனைகளை கண்டுள்ளனர்.
 
அதன்பின் கடற்படையை சேர்ந்த ஒருவர் அந்த பூனைகளை தனது தோளில் வைத்துக் கொண்டு நீந்தி அவற்றை மீட்டுள்ளார்.
 
அதிர்ஷ்டவசமாக அந்த பூனைகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
 
தற்போது அந்த பூனைகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் கவனிப்பில் உள்ளதாக ராயட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.
 
செவ்வாயன்று, ஃபாமான்சின் நாவா 10 என்ற அந்த மீன்பிடி படகில் தீப்பிடித்து எரிந்து மூழ்க தொடங்கியது. தாய்லாந்தின் கோ அடாங் என்ற தீவிலிருந்து 13 கிமீ தூரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. அந்த இடத்தை ஆய்வு செய்ய கடற்படையினர் வந்தபோது, அந்த நான்கு பூனைகள் மரத்துண்டு ஒன்றில் தடுமாறி நின்று கொண்டிருந்ததைக் கண்டனர்.
 
பூனைகள்
பட மூலாதாரம்,REUTERS
"எனது கேமராவில் ஜூம் செய்து பார்த்தபோது ஒன்றிரண்டு பூனைகள் தலையை நீட்டிப் பார்ப்பதை என்னால் பார்க்க முடிந்தது." என கடற்படை வீரர்களில் ஒருவரான விச்சிட் புக்டீலன் தெரிவித்துள்ளார்.
 
பூனைகளைக் காப்பாற்றிய இந்த சம்பவம் குறித்த முகநூல் பதிவு 2,500 கமெண்டுகளை பெற்றதுள்ளது. இது அத்தனையும் அந்த கடற்படையினரை பாராட்டி வந்த கமெண்டுகள்.
 
இந்தியாவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில், 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என இந்தியச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
 
மத்திய பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், ஒடிஷா, உத்தரப் பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ஜார்க்கண்ட், அசாம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா, மணிப்பூர், மிசோரம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உட்பட 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா உயிரிழப்புகள் கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகவில்லை.
 
இருப்பினும் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு, குஜராத் மற்றும் கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 17, 407 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் 85.51 சதவீதம் பேர் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்