''கடந்த 70 ஆண்டுகளாக ஜம்மு -காஷ்மீர், லடாக் பகுதி மக்கள் பாடுபாடுகளால் பாதிக்கப்பட்டிருந்தனர். அது பிரிவினைவாதம் மற்றும் வன்முறை என வடிவமெடுத்து நாடே அந்த பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருந்தது'' என்று பிரதமர் மோதி கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், ''சுற்றுசூழல் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்யாமலே வளர்ச்சி பணிகளை செய்ய முடியும் என்று நமது கலாச்சாரம் நம்புகிறது. இது தற்போது மீண்டும் உறுதியாகியுள்ளது. இயற்கை நமக்கு மிகவும் நெருக்கமானது. அது நமக்கு ஆபரணம் போல'' என்று நரேந்திர மோதி பேசினார்.