கொரோனா சிகிச்சை மருத்துவமனை மீது தீவிரவாத தாக்குதல் நடத்த முயன்றவர் சுட்டுக்கொலை

வியாழன், 26 மார்ச் 2020 (22:58 IST)
அமெரிக்காவில் மிசௌரி மாகாணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்றை தாக்குவதற்காக திட்டமிட்டதாக சந்தேக நபர் ஒருவர், அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.-யுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார்.

பெல்டன் நகரில் 36 வயதான டிமோத்தி ஆர் வில்சன் எனும் நபர் ஒருவரை உள்நாட்டு தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்ய முயற்சித்தபோது இந்த துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது என எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது
.
அந்த நபர் இனவெறி மற்றும் அரசுக்கு எதிரான கொள்கைகளால் ஊக்குவிக்கப்பட்டுள்ளார் என அதிகாரிகாரிகள் கூறியுள்ளனர்.
அவர் மருத்துவமையை தாக்குவதாக திட்டமிடும் முன் பல இலக்குகளைத் தாக்க குறி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
டிமோத்தி ஆர் வில்சன் பல மாதங்களாக கண்காணிக்கப்பட்டு வந்துள்ளார். இவர் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் அனைத்து வாய்ப்புகளும் இருந்ததாக எஃப்.பி.ஐ கூறியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்