மாதவிடாய்: தனிமைப்படுத்தப்பட்ட ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் பலி

சனி, 12 ஜனவரி 2019 (15:15 IST)
மாதவிடாய் காலத்தில் குடிசையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒரு நேபாளி தாயும் அவரது இரண்டு பிள்ளைகளும் அங்கிருந்து பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.


 
குளிர்கால வானிலையிலிருந்து தப்பிக்க அவர்கள் நெருப்பு மூட்டி இருக்கிறார்கள்.
 
இதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் மூச்சு விடமுடியாமல் அவர்கள் உறங்கும் போது இறந்திருக்கலாம் என ஒரு அலுவலர் பிபிசி நேபாளி சேவையிடம் தெரிவித்தார்.
 
தடை செய்யப்பட்ட பழக்கம்
 
மாதவிடாய் காலத்தில் பெண்களை வீட்டிலிருந்து வெளியே அனுப்புவது நேபாளத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த பழக்கம் நேபாள ஊரக பகுதிகளில் இருந்து வருகிறது.
 
மாதவிடாய் காலத்தில் பெண்களை வீட்டை விட்டு வெளியேற்றித் தனிமைப்படுத்தும் செயலைக் குற்றமாக கருதும் சட்டத்தை நேபாள அரசு 2017 ஆம் ஆண்டு இயற்றியது.
 
நேபாளம்: மாதவிடாய் காலத்தில் பெண்களை தனிமைப்படுத்தினால் சிறை
ஆனால், இதன் காரணமாக இறக்கும் முதல் நபர் இவர் அல்ல. பலர் இறந்திருப்பதாக தரவுகள் உள்ளன. மாதவிடாய் காலத்தில் தனியாக தங்க வைக்கப்பட்ட பெண் பாம்பு கடித்து இறந்த சம்பவமும் அங்கு நடந்துள்ளது.
 
பழமையான நம்பிக்கை
 
இந்து மதத்துடன் தொடர்புடைய இந்த பழங்கால நம்பிக்கையானது மாதவிடாய் கால பெண்களை அசுத்தமானவர்களாக பார்க்கிறது. துரதிர்ஷ்டத்தை கொண்டு வரும் பெண்களாக பார்க்கிறது.
 
கால்நடைகளை தொடுவதற்கு கூட அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
 
அவர்கள் தனியாக ஒரு வீட்டில் தங்கவைக்கப்படுகிறார்கள்.
 
பெண்கள் பூப்பெய்யும் போதும் பெண்கள் தனியாக தங்க வைக்கப்படுகிறார்கள். அப்படி தங்க வைக்கப்பட்ட பெண் ஒருவர் தமிழகத்தில் இறந்திருக்கிறார்.
 
சபரிமலை சர்ச்சை: சாஸ்தா வழிபாட்டு மரபில் பெண்கள் விலக்கப்படுகிறார்களா? - உண்மை என்ன?
சபரிமலை சர்ச்சையும், மாதவிடாய் பெண்களை கருவறையில் அனுமதிக்கும் கோயிலும்
'மாதவிடாய் காலத்தில் பெண்களின் வழிபாட்டு உரிமையை பறிக்க முடியுமா?'
மாதவிடாய்: பெண்களுக்காக ஃபேஸ்புக்கில் போராடும் அதிகாரி
கஜ புயலும், நம்பிக்கையும்
 
தமிழகத்தை உலுக்கிய கஜ புயல் தாக்குதலில் இறந்த பலரில் ஒருவர் பட்டுக்கோட்டை அடுத்த அணைக்காடு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது விஜயலட்சுமி.
 
இந்த சிறுமியின் மரணத்திற்கு புயல் மட்டுமே காரணமல்ல என்ற கூற்று எழுந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு பூப்படைந்திருந்த விஜயலட்சுமியை வீட்டுக்கு வெளியே, தென்னந்தோப்பில் உள்ள ஒரு குடிசையில் அந்தப் பெண் தங்கவைக்கப்பட்டாள். அப்போது புயலில் தென்னைமரம் ஒன்று வேருடன் சாய்ந்து குடிசையில் விழுந்தபோது அந்தப் பெண் உயிரிழந்தார்.
 
பூப்படைந்ததால் தென்னந்தோப்பில் தங்கிய சிறுமி கஜ புயலில் மரம் விழுந்து பலி
பூப்படைந்த பெண்ணை வீட்டில் தங்கவைக்ககூடாது என்ற வழக்கத்தின் காரணமாகவே இந்த மரணம் நிகழ்ந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்