உதவியை எதிர்நோக்கும் பாலியல் தொழிலாளர்கள்

சனி, 4 ஏப்ரல் 2020 (16:34 IST)
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பாலியல் தொழிலாளர்கள், அவர்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

இந்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் தரவுகளின்படி இந்தியா முழுவதும் சுமார் 30 லட்சம் பெண்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் உதவிகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அத்தகைய உதவிகள் சென்று சேரும் கடைசி சமூகக் குழுவினராக பாலியல் தொழிலை நம்பியுள்ளவர்களே இருக்கிறார்கள் என்கிறார் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாலியல் தொழிலார்கள் நலனுக்காக இயங்கும் ஷ்ரம்ஜீவி சங்காதன் எனும் அமைப்பின் டாக்டர் ஸ்வாதி கான்.

இதனால் இந்தியா முழுவதுமுள்ள பாலியல் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தொண்டு நிறுவனங்களின் உதவியை எதிர்பார்த்துள்ளனர்.
இந்தியப் பிரதமர் ஊரடங்கை அறிவிக்கும் முன்னரே, எங்கள் சிவப்பு விளக்கு பகுதியின் செயல்பாட்டை நிறுத்திவிட்டோம். பிறருக்கு நோய் பறவக்கூடாது என்பதால் அவ்வாறு செய்தோம். இப்போது எங்கள் குழந்தைகள் குறித்தும் நாங்கள் யோசிக்க வேண்டியுள்ளது என்று பாலியல் தொழிலாளி ரேகா கூறுகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்