இதனை டெல்லி போலீஸ் மறுத்துள்ளது. "பாஜகவின் டெல்லி போலீஸ் அரவிந்த் கேஜ்ரிவாலை வீட்டுச் சிறையில் வைத்துள்ளது. அவர் நேற்று சிங்கு எல்லைப் பகுதியில் விவசாயிகளை சந்தித்துவிட்டு வந்ததில் இருந்து (அரவிந்த் கேஜ்ரிவால்) வீட்டில் இருந்து வெளியேறவோ, வீட்டுக்குள் நுழையவோ யாரும் அனுமதிக்கப்படவில்லை" என்று அந்த ட்விட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த ட்வீட்டுக்கு டெல்லி வடக்கு துணை போலீஸ் ஆணையரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் பதில் அளித்துள்ளது. அதில் "டெல்லி முதல்வர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறும் இந்தக் கூற்று தவறானது. மண்ணின் சட்டத்துக்கு உட்பட்டு நடமாடும் உரிமையை அவர் செயல்படுத்தி வருகிறார். வீட்டின் முகப்பைக் காட்டும் படம் எல்லாவற்றையும் கூறுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.