வால்ரஸ் எனப்படும் கடல் விலங்குகள் பெரும் எண்ணிக்கையில் வடமேற்கு அலாஸ்காவின் கரையோரத்தில் வந்துகுவிந்துள்ளன.
பூமியின் வடகோடியான ஆர்ட்டிக் பிராந்தியத்தின் சுற்றுச்சூழல் வேகமாக மாறிக்கொண்டிருப்பதையே இந்த வால்ரஸ் கூட்டங்கள் காட்டுவதாக கூறும் WWF அமைப்பு, கோடைகால பனிக் கட்டிகள் குறைந்துவருவதாகவும் தெரிவித்துள்ளது.