பெண்கள் மேம்பாட்டு துறை தூதுவராக ஹாக்கி வீராங்கனை! – உத்தரகாண்ட் அரசு கவுரவம்!

திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (08:13 IST)
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய ஹாக்கி வீராங்கனைக்கு உத்தரகாண்ட் அரசு பெண்கள் மேம்பாட்டு துறை தூதுவராக பதவி வழங்கியுள்ளது.

நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் சார்பாக விளையாடியவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த வந்தனா. பெண்கள் ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் தோல்வியடைந்த போது இவரது வீட்டின் எதிரே சில சமூகத்தினர் பட்டாசு வெடித்து கொண்டாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக வந்தனாவுக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்தனர். இந்நிலையில் உத்தரகாண்ட் அரசு வந்தனாவுக்கு மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை தூதுவராக பதவி வழங்கி கவுரவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்