மும்பையில் 2 மணி நேர மின்சாரத்தடை: ஸ்தம்பித்த நகரம்!

திங்கள், 12 அக்டோபர் 2020 (15:39 IST)
மும்பை நகரில் சுமார் இரண்டு மணி நேரமாக மின்சாரத்தடை ஏற்பட்டது குறித்து விசாரிக்க மகராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
 
மின் இணைப்பு க்ரிடில் ஏற்பட்ட பழுதால் இந்த மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த மின்சாரத் தடையால் உள்ளூர் ரயில் சேவை, இணைய வழி வகுப்புகள், தேர்வுகள் ஆகியன தடைப்பட்டன. மேலும் மருத்துவமனைகளிலும் மின்சாரத் தடை ஏற்பட்டது குறித்து பலர் சமூக ஊடகங்களில் கவலை தெரிவித்தனர்.
 
விமான நிலைய செயல்பாடுகளில் எந்த தடங்கலும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். மும்பை நகரில் தடையில்லா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவில் நகர் முழுவதும் மின்சாரத் தடை இன்று ஏற்பட்டது.
 
இரண்டு மணி நேரத்திற்கு பிறகு தற்போது பகுதி பகுதியாக மின்சாரம் திரும்ப வரத் தொடங்கியுள்ளது. மும்பைக்கு மின்சார விநியோகம் செய்யும் நிறுவனமான `பெஸ்ட்` நிறுவனம், டாடாவின் மின்சார உள் விநியோகத்தில் ஏற்பட்ட பழுதே இதற்கு காரணம் என ட்விட்டரில் தெரிவித்திருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்