நரேந்திர மோதியை ஹிட்லருடன் ஒப்பிட்ட காங்கிரஸ் தலைவர்

சனி, 16 மார்ச் 2019 (19:22 IST)
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை ஹிட்லருடன் ஒப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்ட காங்கிரஸ் திக்விஜய சிங்கிற்கு எதிராக சமூக வலைதளங்களில் வாதங்கள் எழுந்துள்ளன.

 
நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் நேற்று (வெள்ளிக்கிழமை) துப்பாக்கித்தாரிகள் நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 
"இந்நிலையில், நியூசிலாந்தில் நடந்த துப்பாக்கிச்சூடு பயங்கரவாதத்தின் ஒரு இழிவான செயலாகும், அது உண்மையாக கண்டிக்கப்பட வேண்டும். மதவெறியையும், வெறுக்கத்தக்க பயங்கரவாதத்தையும் உலகம் எதிர்த்து நிற்கிறது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் எனது அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன்" என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதை தனது கணக்கில் ரீட்வீட் செய்த காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான திக்விஜய சிங் ராகுல் காந்தியின் கருத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்வதாக பதிவிட்டுள்ளார்.
 
"இந்த உலகிற்கு கௌதம புத்தரும், மஹாவீரும் பரப்பிய அன்பு, அமைதி, பரிவு ஆகியவையே தேவைப்படுகிறது. வெறுப்பும், வன்முறையும் இங்கு தேவையில்லை. நமக்கு மகாத்மா காந்திகளும், மார்ட்டின் லூதர் கிங்கும்களும்தான் வேண்டும், ஹிட்லர்கள், முசோலினிகளும் மற்றும் மோதிகளும் தேவையில்லை" என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
 
இதைத்தொடர்ந்து, திக்விஜய சிங்கிற்கு எதிரான கருத்துகள் அவரது ட்விட்டுக்கு மறுமொழியாக பதிவிடப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான கருத்துக்கள் மோதிக்கும், மோதி அரசுக்கும் ஆதரவாகவும், காங்கிரஸுக்கு எதிராகவும் பதியப்பட்டுள்ளன.
 
"நீங்கள் ராகுலுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்குத்தான் உடன்பட வேண்டும். தேர்தல் முடிவுகள் வந்து, மோதி பெரும்பான்மையோடு மீண்டும் ஆட்சியமைத்தவுடன், ராகுல் அரசியலிலிருந்து ஓய்வு பெறலாம்" என்று பிரதீப் என்பவர் பதிவிட்டுள்ளார்.
 
மேலும், நீங்கள் ராகுல் காந்தியின் கருத்தை ஆதரிப்பதைவிட உங்களுக்கு வேறு என்ன வழி உள்ளது என்பது? என்பது போன்ற கேள்விகளையும் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

Don't worry sir you will have to agree with @RahulGandhi for 2 more months.Once the election is over& Modi returns with huge majority,he may retire from politics.

— Pradip (@pradip1951) March 16, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்