தற்போது மங்களூருவில் அமைதி நிலவுவதாகவும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் மூத்த கர்நாடக போலீஸ் அதிகாரி ஒருவர் இன்று காலை தெரிவித்தார். நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
உ.பி. தலைநகர் லக்னௌவில் பரிவர்த்தன் சௌக் பகுதியில் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது 20 மோட்டார் சைக்கிள்கள், 10 கார்கள், 3 பேருந்துகள், 4 ஊடக நேரலை வண்டிகள் கொளுத்தப்பட்டன என்று ஏஎன்ஐ செய்தி முகமையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், லக்னௌ போராட்டத்தில் ஒரு போராட்டக்காரர் இறந்தது பற்றி பேசிய உ.பி. போலீஸ் டி.ஜி.பி. ஓ.பி.சிங், "எங்கள் தரப்பில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை. எப்படி மரணம் நடந்தது என்று எனக்குத் தெரியாது. போராட்டத்தாலோ, போலீஸ் நடவடிக்கையாலோ அது நடந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை" என்று கூறினார்.