நீங்கள் தேடும் சிறந்ததை கூகுள், அமேசான் தருகிறதா? இலவச சேவை மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் கிடைப்பது எப்படி?

Sinoj

புதன், 7 பிப்ரவரி 2024 (21:22 IST)
மக்களுக்கு இலவசமாக சேவைகளை கொடுக்கும் அந்நிறுவனங்கள் எவ்வாறு பணம் சம்பாதிக்கின்றன? அந்நிறுவனங்களுக்கு எந்த வழியில் பணம் வருகிறது? என்ற கேள்வி நம் மனதில் எழலாம்.
 
டிம் ஓ'ரெய்லி, இலன் ஸ்ட்ராஸ் மற்றும் மரியானா மஸ்ஸுகாடோ ஆகிய மூன்று கல்வியாளர்கள் இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க முயன்றனர்.
 
இன்றைய டிஜிட்டல் சந்தை யுகத்தில் இந்த தளங்களின் சக்தியை விளக்கும் ஒரு கோட்பாட்டை அவர்கள் உருவாக்கினர்.
 
இந்த தளங்கள் இன்று மிகவும் சக்தி வாய்ந்தவர்கள் என்பதை நாங்கள் அறிவோம். இந்த நிறுவனங்கள் நம் கவனத்தை ஈர்த்து, அதன் மூலம் விளம்பரதாரர்களிடமிருந்து கட்டணத்தைப் பெற்று அதிக பணம் சம்பாதிக்கின்றன என இந்த மூன்று கல்வியாளர்களும் கூறினார்கள்.
 
கூகுள் மற்றும் அமேசான் போன்ற தளங்களில் உள்ள தேடுபொறிகள்(search engine) முதலில் பயனரின் 'ஸ்பான்சர் செய்யப்பட்ட உள்ளடக்கத்தை' அதாவது வணிக விளம்பரங்களைக் காட்டுகின்றன.
 
அவை ஆர்கானிக் முடிவுகள் எனப்படும் உண்மையான தேடல் முடிவுகள் அல்ல என்பதை அடிப்படையாகக் கொண்டது அவர்களின் கோட்பாடு.
 
ஆர்கானிக் தேடல் முடிவுகள் பணம் செலுத்தப்படாத பட்டியல்களாகும், அவை தேடுபொறி முடிவுகள் பக்கங்களில் (SERPs) தோன்றும். இவை பயனர்கள் தேடும் சொல்லுடன் தொடர்புடையவை.
 
இந்த வழியில், இந்த கோட்பாட்டை உருவாக்கியுள்ள கூகுள் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்கள் தங்கள் தளங்களில் தோன்றுவதற்கு பணம் செலுத்துமாறு விளம்பரதாரர்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றன, பின்னர் பயனர்களுக்கு(Users) 'மோசமான தேடல் முடிவுகளை' வழங்குகின்றன.
 
கூகுள் மற்றும் அமேசான் செய்தித் தொடர்பாளர்கள் பிபிசி முண்டோவிடம், பயனர்கள் எதைத் தேடுகிறார்கள் என்பதற்குப் பொருத்தமான விளம்பரங்களைக் காட்ட, 'அதிநவீன அல்காரிதம்'களைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்தனர்.
 
எடுத்துக்காட்டாக, கூகுள் செய்தித் தொடர்பாளர், அவர்களின் தேடுபொறி 80 சதவீத தேடல்களில் வணிக விளம்பரங்களைக் காட்டாது என்று கூறினார்.
 
"நாய் உணவு" மற்றும் "பிரைடல் ஷூக்கள்"(Bridal Shoe) போன்ற குறிப்பிட்ட கேள்விகளுக்கு மட்டுமே இதைச் செய்யும் என்று அது கூறியது.
 
இருப்பினும், இந்த தளங்கள் சந்தையில் தங்களுக்கு உள்ள செல்வாக்கை தவறாக பயன்படுத்துவதாக கோட்பாட்டாளர்கள் நம்புகின்றனர்.
 
 
டிம் ஓ'ரெய்லி பிபிசி முண்டோவிடம் பேசினார். அவர், அல்காரிதத்தின் மூலமாகப் பெறப்படும் வருமானம் என்றால் என்ன? அது எப்படி நுகர்வோரின் கவனத்தை ஈர்ப்பதன் மூலம் பெறப்படுகிறது என்பது குறித்து விளக்கினார். இவர் கணினி துறையில் வல்லுனர்.
 
“அல்காரிதம் பற்றப் பேச வேண்டும் என்றால், அவைதான் இந்தச் சந்தையைக் கட்டுப்படுத்தும் கருவிகள்,” என்றார் அவர்.
 
கூகுள் மற்றும் அமேசானில் தேடல் முடிவுகளைக் காட்ட, அல்காரிதம்கள் பயன்படுத்தப்படுகின்றன.
 
பிபிசி பேசிய மூன்று கல்வியாளர்களின் கூற்றுப்படி, டிஜிட்டல் சந்தையில் பணியாற்றுவதற்கான முக்கிய விஷயம் மக்களின் கவனத்தை ஈர்ப்பதாகும்.
 
அடிப்படையில், இந்த பெரிய இணையதளங்கள் அனைத்துமே மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அல்காரிதம்களை நன்கு பயன்படுத்தப் பழகியவை.
 
“மிகப் பெரிய அளவிலான உள்ளடக்கத்திலிருந்து நாம் விரும்புவதையும், நமக்குத் தேவையானதையும் பிரித்தெடுக்க அவை உதவுகின்றன,” என்றார் ஓ'ரெய்லி.
ட்பாட்டை "அல்காரிதமிக் ரெண்ட்ஸ் ஆஃப் அட்டென்ஷன்" (Algorithmic Rents of Attention) எனக் குறிப்பிடுகின்றனர்.
 
ஏனென்றால், இதுவரை கட்டுப்பாட்டு அமைப்புகள் பயனர்களின் தரவு மற்றும் தனியுரிமையைப் பாதுகாப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன.
 
இந்த தளங்கள் பயனர்களின் தரவை அவர்களின் அனுமதியின்றி எடுத்துக்கொண்டு அவர்களின் தரவை தவறாகப் பயன்படுத்துவதாக ஒரு வாதம் உள்ளது. பயனர்களில் செயல்பாட்டை கண்காணிக்க அவர்களின் தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற கவலையும் உள்ளது.
 
ஓ'ரெய்லி, ஸ்ட்ராஸ் மற்றும் மஸ்ஸுகாடோவும் இந்த விஷயத்தைத் மறுக்கவில்லை. ஆனால், இந்த முறைகேடுகள், அந்த அல்காரிதம் எவ்வாறு நம் கவனத்தைக் கட்டுப்படுத்தி பணமாக்குகின்றன என்பதைப் பொறுத்தது என்கிறார்கள்.
 
"தரவு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் உண்மையான பிரச்னை" என்றார் ஓ'ரெய்லி.
 
நாம் அமேசானில் எதையாவது தேடும்போது, ​​லட்சக்கணக்கான பொருட்களில், நாம் எதைத் தேடினோம் என்பதைக் காட்ட அல்காரிதம் அமைப்புகள் நிறைய தரவுகளைப் பயன்படுத்துகின்றன. அப்போது மக்களுக்குப் பயன்படும் சிறந்த மற்றும் மலிவான பொருட்களை அவை காண்பிக்க வேண்டும். அப்படி செய்தால், நம் தரவுகள் சரியாகப் பயன்படுத்தப்படுகிறது என்று பொருள்.
 
"ஆனால் சில நேரங்களில் அந்நிறுவனங்கள் உங்களுக்கு எது சிறந்தது என்பதைக் காட்டாது. அதற்குப் பதிலாக, நிறுவனங்களுக்கு எது நல்லது? எது லாபம் தரக் கூடியது? என்பதை மட்டும் காட்டுகிறார்கள். அங்குதான் முறைகேடு நடக்கிறது,'' என விளக்கினார் ஓ'ரெய்லி.
 
 
அமேசான் மற்றும் கூகுள் நிறுவனங்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கின்றன.
 
"எங்கள் விளம்பர தர அமைப்புகளில் நாங்கள் குறிப்பிடத்தக்க அளவில் முதலீடு செய்கிறோம். எங்கள் அமைப்புகளை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம், மக்களுக்கு பயனுள்ள மற்றும் பொருத்தமான விளம்பரங்களை மட்டுமே அவர்கள் தேடுகிறார்கள்," என கூகுள் செய்தித் தொடர்பாளர் பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார்.
 
"மக்களுக்கு மிகவும் பயனுள்ள பொருட்களை வழங்குவதற்காக மேம்பட்ட வழிமுறைகள் மற்றும் இயந்திர கற்றல்(Machine Learning) ஆகியவற்றிலிருந்து பயனடைவதற்காக ஸ்பான்சர் செய்யப்பட்ட முடிவுகளைக் காட்டுகிறோம். வாடிக்கையாளர்களுக்குத் தேவையான விளம்பரங்களைக் காட்டுகிறார்கள். இதனால், பிராண்டுகள்(தனியார் நிறுவனங்கள்) லாபம் ஈட்டுகின்றன,'' என கூகுளைப் போலவே அமேசான் நிறுவனமும் பதிலளித்தது.
 
"டிம் ஓ’ரெய்லி, இலன் ஸ்ட்ராஸ் மற்றும் மரியானா மஸ்ஸூகாடோ ஆகியோரின் ஆராய்ச்சியானது கூகுள் தேடலில் விளம்பரம் செய்வதால் மக்கள் மற்றும் விளம்பரதாரர்கள் பெறும் அனைத்து நன்மைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை" என கூகுள் செய்தித் தொடர்பாளர் குற்றம் சாட்டினார்.
 
நிறுவனங்களின் இந்த விளக்கத்தை கோட்பாட்டாளர்கள் விமர்சிக்கிறார்கள்.
 
அமேசானை எடுத்துக்கொண்டால்.. "நீங்கள் எந்தப் பொருளையும் தேடும்போது, ​​இந்த தளம் சிறந்த மதிப்புரைகள் மற்றும் விலைகளுடன் உள்ள பொருட்களை முதலில் காட்டாது. முதலில் பணம் செலுத்திய உற்பத்தியாளரின் பொருட்களையே காட்டுகிறது” என்று உதாரணத்துடன் விளக்கினார்கள்.
 
இதன் விளைவாக, அமேசான் இன்று விளம்பரங்கள் மூலம் ஆண்டுக்கு 38 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 3.15 லட்சம் கோடி ரூபாய் சம்பாதிக்கிறது.
 
முதலில் அவர்கள் வணிக விளம்பரதாரர்களுக்கு ஆதரவாக உள்ளனர்.
 
"விளம்பரதாரர்கள் புதிய வாடிக்கையாளர்களை அடைய உதவுவதில் அமேசான் மிகவும் ஆர்வமாக உள்ளது" என ஓ'ரெய்லி கூறினார்.
 
 
"இப்போது அவர்கள் இந்த பெரிய வணிகத்தை உருவாக்கியுள்ளனர். அவர்களின் தளத்தில் விளம்பரங்களைக் காட்ட, முதலில் பணம் செலுத்த வேண்டும். விளம்பரதாரர்களுக்கான இந்த விலைகளை அமேசான் படிப்படியாக அதிகரித்து வருகிறது," என ஓ'ரெய்லி விளக்கினார்.
 
ஒரு கிளிக்கிற்கான விளம்பரதாரர்களின் விலை 2018 இல் சராசரியாக $0.56 ஆக இருந்தது, 2021 இல் $1.2 ஆக உயர்ந்துள்ளது.
 
அமேசான் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பல தசாப்தங்களாக சில்லறை வணிகங்களில் விளம்பரம் ஒரு பகுதியாக உள்ளது.
 
இந்த விளம்பரங்கள் நிகழ்நேர செயல்பாட்டின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுவதாக கூகுள் கூறுகிறது.
 
கூகுள் இந்த விலையை முன்கூட்டியே முடிவு செய்யவில்லை. ஆனால் இது விளம்பரதாரர்களின் சலுகைகளைப் பொறுத்தது என்று நிறுவனம் கூறுகிறது.
?
 
"அமேசானில் அடிக்கடி பார்க்கும் பொருட்களைத் தேடும்போது, ​​பயனர்கள் எதை அதிகம் கிளிக் செய்கிறார்கள் என்ற பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். இது எங்களின் கண்டுபிடிப்புகளில் ஒன்று,'' என இக்கோட்பாட்டை உருவாக்கியவர்கள் தெரிவித்தனர்.
 
"அமேசானின் ஆர்கானிக் தேடுபொறி, தேடல் வார்த்தையின் அடிப்படையில் 5 முதல் 50 இடங்களில் அதிக பணம் செலுத்தியுள்ள நிறுவனங்களின் விளம்பர பொருட்கள் தோன்றுவதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்" என்றார் டிம் ஓ'ரெய்லி.
 
விளம்பரத்திற்கு பணம் செலுத்தும் பொருட்களின் விலைகள் சராசரியாக 17 சதவீதம் அதிகமாக இருந்ததாக அவர் கூறினார்.
 
"குறைந்த விலையில் பொருட்களை வழங்குவதற்கும், சிறந்த விலையில் பொருட்களைப் வாங்குவதற்கும் நீங்கள் தேடுபொறிக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று அமேசான் கூறுகிறது. ஆனால், இது உங்களை அதிக விலையுள்ள பொருட்களை வாங்க வைக்கும் என்று ஓ'ரெய்லி விமர்சித்துள்ளார்.
 
ஓ'ரெய்லி கூறுகையில், பல ஆண்டுகளாக, குறிப்பாக கூகுள், நமக்கு முன்னால் இருப்பது சிறந்தது என்று நம்ப வைத்துவிட்டது. இது அந்தத் தளங்களுக்குத் தெரியும். அதனால்தான் பயனர்களை கிளிக் செய்ய சில பொருட்களை எங்கு காட்டுவது என்பது அவர்களுக்குத் தெரியும்" என்று இந்த வடிவமைப்பாளர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரையில் கூறுகின்றனர்.
 
"வாடிக்கையாளர்கள் தங்கள் ஷாப்பிங் தேவைகளுக்கு பொருத்தமான விளம்பரங்களை மட்டுமே கிளிக் செய்கிறார்கள்" என்று அமேசான் கூறுகிறது.
 
 
ஓ'ரெய்லி, ஸ்ட்ராஸ் மற்றும் மஸ்ஸுகடோ ஆகியோர் குறுகிய காலத்தில் இந்த உத்தி மிகவும் லாபகரமானது, ஆனால் நிலையற்றது என்று எச்சரிக்கின்றனர்.
 
"நிறுவனங்கள் மக்களின் தேவையை புறக்கணித்து தங்களுக்கு ஏற்றாற்போல் சேவை செய்யத் தொடங்கும் போது பணத்தை இழக்க நேரிடும்," என்றார் ஓ'ரெய்லி.
 
இந்த கோட்பாட்டின் ஆசிரியர் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கும் இது நடந்துள்ளது என்று சுட்டிக்காட்டுகிறார்.
 
மைக்ரோசாப்ட் சந்தையில் ஆதிக்கம் செலுத்திய போது இதுபோன்ற முயற்சிகள் பின்வாங்கின என்கிறார் ஓ'ரெய்லி.
 
"அமேசானுக்கும் கூட, அது அதன் பயனர்களை ஏமாற்றுகிறது எனத் தெரியும்," என்றார் அவர்.
 
"வாடிக்கையாளர் அனுபவத்தைப் பற்றிய பெரும்பாலான கருத்துகள் நேர்மறையானவை. வாடிக்கையாளர்களும் எங்கள் பொருட்களை கிளிக் செய்து, அவர்கள் வணிகம் செய்தும் தளத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் அந்தப் பொருட்களை பின்னாளில் வாங்குகிறார்கள்" என்று அமேசான் செய்தித் தொடர்பாளர் பிபிசி முண்டோவிடம் கூறினார்.
 
பயனர்கள் இதைப் பற்றி என்ன செய்ய முடியும் என்று வரும்போது, ​​​​முதலில் சந்தேகத்தை வெளிப்படுத்துவது மிக முக்கியமான விஷயம் என்று ஓ'ரெய்லி கூறுகிறார்.
 
இந்த தளங்களில் நீங்கள் பார்க்கும் முதல் பொருள் அல்லது இணைப்பு சிறந்தது என்று நீங்கள் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என்று அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்