"இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக பேசிய ஐநாவின் சுற்றுச்சூழல் திட்டத்தின் தலைவர் இங்கர் ஆண்டர்சன், வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் நமது தவறான மேலாண்மையால் ஏற்பட்ட ஒரு நோயால் நாம் அனைவரும் உள்ளேயே பூட்டிக் கொண்டிருக்கிறோம்," என அவர் தெரிவித்தார்.
உலகத் தலைவர்கள் பங்கெடுக்கும் இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இதன் நோக்கம் பல்லுயிர் பெருக்கம் அழிவில் உள்ளதால் மனிதகுலம் சந்திக்கும் பிரச்சனை குறித்து பேசுவதாகும். மேலும் நீடித்த ஒரு மேம்பாட்டிற்காக உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.