இ.எல்.என் என்று அறியப்படும் தேசிய விடுதலை ராணுவம் கொலம்பியாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் மார்க்சியப் போராளிக் குழுவாகும். கொலம்பியாவில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து, நிலம் மற்றும் வளங்களை சமமாகப் பிரித்து வழங்கும் நோக்கில் 1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதில் சுமார் 2000 பேர் உறுப்பினர்களாக உள்ளார்கள். 1959இல் நிகழ்ந்த கியூபப் புரட்சியின் உந்துதலால் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.