இலங்கையில் 7 மணிநேரத்திற்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு

வியாழன், 12 மே 2022 (10:23 IST)
இலங்கையில் கடந்த 9-ம் தேதி ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்தும் அமல்படுத்தப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு இன்று காலை 7 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது.


இவ்வாறு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16வது சரத்திற்கு அமைய நாடு தழுவிய ரீதியில் இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இவ்வாறு இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமல்படுத்தப்படும் ஊரடங்கு, நாளை (13) காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளினால் வழங்கப்பட்ட எழுத்துமூல அனுமதியின் அதிகாரத்தின் கீழ் தவிர, அந்த பகுதிகளிலுள்ள பொதுச்சாலை, ரயில் தண்டவாளம், பொது பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அல்லது கடற்கரை பகுதிகளில் யாரும் தங்குவதற்கு அனுமதி வழங்கப்படாது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்