ஆதாயம் தரும் ஆகஸ்டு மாத ராசிபலன், அதிர்ஷ்ட நாட்கள்! – சிம்மம்

Prasanth K

புதன், 30 ஜூலை 2025 (17:01 IST)
அதிர்ஷ்டம் தரும் மாதமான ஆகஸ்டு மாதத்தில் உங்களுக்கான ராசிபலன் மற்றும் பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்

கிரகநிலை:
ராசியில் கேது - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - லாப ஸ்தானத்தில் புதன், குரு, சுக்கிரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:
03.08.2025  அன்று  லாப  ஸ்தானத்தில்  இருந்து  புதன்   அயன சயன போக  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
17.08.2025  அன்று  அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து  சூரியன் ராசிக்கு  மாறுகிறார்.
21.08.2025 அன்று சுக்கிரன் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25.08.2025  அன்று  அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து  புதன் ராசிக்கு  மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் சாமர்த்தியமாக திட்டமிட்டு எதிலும் ஈடுபடுவீர்கள். உடல் ஆரோக்யம் பெறும். மனதில் தைரியமும், உற்சாகமும் கூடும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவுகளை உண்பீர்கள். வார இறுதியில் நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். வெளி வட்டார தொடர்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.

கணவன், மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகி ஓரளவு நல்ல ஒற்றுமையுடன் வாழ நேரிடும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பெண்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். பெண்களுக்கு எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மனோ திடம் கூடும். கலைத்துறையினருக்கு உற்சாகமாக காணப்படுவீர்கள். அரசியல்துறையினருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். கல்விக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

மகம்:
இந்த மாதம் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாவதால் ஏற்றமிகு பலனைப் பெறுவீர்கள். விநாயகர், துர்க்கை அம்மனை வழிபடுவது உத்தமம்.

பூரம்:
இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக அமைந்து பலமும், வளமும் அதிகரிக்கும். பணவரவுகள் தாராளமாக அமைவதால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உற்றார்- உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.

உத்திரம்:
இந்த மாதம் கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் சாதகமான பலனை அடைவார்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலை நல்லமுறையில் அபிவிருத்திச் செய்யமுடியும்.

பரிகாரம்: சிவனை வணங்க காரிய தடை நீங்கும். எதிலும் வெற்றி கிடைக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 13, 14
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 21, 22

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்