ஆதாயம் தரும் ஆகஸ்டு மாத ராசிபலன், அதிர்ஷ்ட நாட்கள்! – ரிஷபம்

Prasanth K

செவ்வாய், 29 ஜூலை 2025 (17:17 IST)
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், குரு, சுக்கிரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன் - சுக ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:
03.08.2025  அன்று  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து  புதன்   தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
17.08.2025  அன்று  தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து  சூரியன் சுக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
21.08.2025 அன்று சுக்கிரன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25.08.2025  அன்று  தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து  புதன் சுக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் செல்வாக்கு உயரும். உங்களது செயல்களை யாரும் குறை கூறக்கூடாது என்பதை மனதில் கொண்டு செயல்களை செய்வீர்கள். வருமானம் கூடும். சந்திரன் சஞ்சாரத்தால் காரிய தடைகள் நீங்கும். திட்டமிட்டபடி எல்லாம் நடக்கும். ராசியாதிபதி சுக்கிரன் சஞ்சாரம் ஆடம்பரமான பொருட்களை வாங்க தூண்டும். கடன் தொல்லை குறையும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத தடைகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பல தடைகளை சந்திக்க வேண்டி இருந்தாலும் முடிவில் வெற்றி உங்கள் பக்கமே இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். வாழ்க்கை துணையின் எண்ணப்படி பொருட்கள் வாங்க நேரும். கணவன்-மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு தடை நீங்கி பணிகள் வேகம் பிடிக்கும். அரசியல்துறையினருக்கு செல்வாக்கு கூடும். மாணவர்களுக்கு பல தடைகளையும் தாண்டி கல்வியை கற்று வெற்றி பெறுவீர்கள். அடுத்தவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும்.

க்ருத்திகை:
இந்த மாதம் நிலுவையில் இருந்த சம்பள பாக்கிகளும் கைக்குக் கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உங்களுக்கு மேன்மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தும். நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் நிலவினாலும் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.

ரோகினி:
இந்த மாதம் மாணவர்கள் கல்வியில் பல சாதனைகளைப் படைப்பார்கள். அரசுவழியில் பல உதவிகளும் தேடிவரும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவும் பெருகும். பொருளாதாரமும் மேம்படும். சர்ப்ப கிரகங்கள் சாதகமின்றி சஞ்சரிப்பதால் அம்மனை வழிபடுவது உத்தமம்.

ம்ருகசீரிஷம்:
இந்த மாதம் நீங்கள் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது.  குடும்பத்தில் ஒற்றுமைக்குறைவுகள், தேவையற்ற வாக்குவாதங்கள் போன்றவற்றால் மன நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலைகளே நிலவும். நண்பர்களே விரோதிகளாக மாறுவார்கள். பணவிஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்த்துவிடுவது உத்தமம்.

பரிகாரம்: ராஜ ராஜேஸ்வரியை வணங்க மனது மகிழும் படியான அளவில் காரியங்கள் நடக்கும். கடன் பிரச்சனை தீரும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 06, 07
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 15, 16

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்