ஆகஸ்ட் 5ல் கட்சியை கைப்பற்றுகிறாரா தினகரன்?

வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (05:31 IST)
அதிமுகவின் இரு அணிகளும் இணைய தினகரன் கொடுத்த கெடு இன்றுடன் முடிவடைவதால் நாளை தலைமைக்கழகத்திற்கு சென்று அதிரடி முடிவு எடுக்கவுள்ளாராம் தினகரன்.



 
 
கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையை தினகரனுக்கு கொடுக்க மாவட்ட செயலாளர்கள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
 
நாளை நடக்கவிருக்கும் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் தவிர கிட்டத்தட்ட அனைவரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் சசிகலாவை தவிர அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்க இன்று முதல்வரிடம் இருந்து அறிவிப்பு வரலாம் என்றும், கட்சியை தினகரனிடம் தாரை வார்ப்பதை விட ஓபிஎஸ் அணியுடன் இணைவதே நல்லது என்ற முடிவில் முதல்வர் இருக்கின்றாராம்
 
எனவே இன்றும் நாளையும் அதிமுகவில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்றே கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்