தமிழகத்தில் நடைபெறும் ஒவ்வொரு அரசியல் சம்பவத்திற்கும் சூத்திரதாரி பாஜக மேலிடம்தான் என்று பலருக்கு தெரியவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் வெளிப்படையாக கூறி வருகின்றனர். பாஜகவின் முதல் அசைன்மெண்ட் அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தை வெளியேற்றுவது. சசிகலா சிறை, தினகரன் வழக்குகள் என வெற்றிகரமாக அந்த அசைன்மெண்ட் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்துவிட்டால் அதிமுக பலமாகிவிடும். பின்னர் தங்களுடைய பேச்சை கேட்க மாட்டார்கள் என்றுதான் தேர்தல் வரை இருவரையும் இணைக்காமலே வைத்திருந்து தேர்தலின்போது ஏதாவது ஒரு அணிக்கு ஆதரவு கொடுத்து இன்னொரு அணியை ஒழித்துகட்டுவதுதான் இப்போதைக்கு பாஜகவுக்கு கொடுக்கப்பட்டுள்ள அடுத்த அசைன்மெண்ட் என்று கூறப்படுகிறது