ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் பணம், ஆன்லைன் ஷாப்பிங், அரசு பேருந்தில் பணப் பட்டுவாடா, மளிகை பில் கட்டுவது, பாத்திரக்கடை மூலம் பரிசுப் பொருட்கள் என பல்வேறு யுக்திகளை பின்பற்றி தினகரன் தரப்பு ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு பணத்தை வாரி இறைத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி “ எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தினகரன், ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடாவை செய்து வருகிறார். இதுவரை அவர் ரூ.122 கோடி வரை செலவு செய்துள்ளார்.
அவர்களின் ஆட்சி என்பதால், பணப்பட்டுவாடா செய்யும் நபர்களை பிடிக்கும் போலீசார், போகும் வழியிலேயே அவர்களை இறக்கி விட்டு சென்று விடுகின்றனர். சசிகலா குடும்பத்தை விரட்டி விட்டால் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீண்ட வருடத்திற்கு ஆட்சி செய்யும்” என அவர் புகார் கூறியுள்ளார்.