ரிலையன்ஸ் பாலிலும் கலப்படம். அமைச்சர் ராஜேந்திர பாலஜி அதிரடி

புதன், 28 ஜூன் 2017 (05:01 IST)
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த சில நாட்களாகவே தனியார் பால் நிறுவனங்கள் பாலில் ரசாயனங்கள் கலந்து வருவதாக குற்றம் சாட்டி வருகிறார். இந்த நிலையில் நெஸ்லே டுடே, ரிலையன்ஸ் பால் பவுடரில் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதாகவும் இதுபோன்ற நிறுவனங்களின் பால்களை வாங்குவதன் மூலம் பொதுமக்கள் விலை கொடுத்து நோயை வாங்குவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.



 


மேலும் ஆவில் பால் மற்றும் தயிரில் எந்தவித ரசாயன கலப்படமும் இல்லை என்று அவர் உறுதி கூறியுள்ளார். இதுநாள் வரை எந்த நிறுவனத்தின் பாலில் கலப்படம் இருக்கிறது என்பதை கூறாமல் பொதுவாக தனியார் பாலில் கலப்படம் என்று கூறி வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தற்போது நிறுவனங்களின் பெயர்களையும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நெஸ்ட்லே டுடே, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் பால் பவுடரில் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு தன்னிடம் தகுந்த ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறிய அமைச்சர், இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கூறி நடவடிக்கை எடுப்பேன்' என்றும் அவர் உறுதிபட கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்