பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், ‘’தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஐந்தாவது ஆறாவது இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது மூன்றாவது கட்சியாக வளர்ந்துள்ளது. காங்கிரஸ் கட்சி பலம் வாய்ந்த இயக்கமாக தொடர்ந்து உருவாகி வருகிறது.
சுப்பிரமணிய சாமியை ஜெயலலிதாவுக்கு எதிரான கருத்து கூறினார் என்று ஜெயலலிதாவால் தூண்டிவிடப்பட்ட அதிமுகவினர், நீதிமன்றத்தில் சுப்பிரமணியசாமிக்கு அநாகரீகமா வரவேற்பெல்லாம் கொடுத்தார்கள். அதுபோலத்தான் எம்பி சசிகலா புஷ்பாவை அடித்த விவகாரமும். அதிமுக ஒரு வன்முறை இயக்கம்’’ என்றார்.