நீட் எதிர்ப்பு போராட்டம்: திடீரென ரத்து செய்த தினகரன்

சனி, 9 செப்டம்பர் 2017 (07:55 IST)
நீட் தேர்வை எதிர்த்து  மணி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கு ஒன்றில் தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம், போராட்டம், கடையடைப்பு போன்ற எந்தச் செயலும் நடத்தக் கூடாது என்றும் இருப்பினும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம் என்றும் கூறியுள்ளது.



 
 
நீட் தேர்வுக்கு எதிரான போரட்டத்தை சுப்ரீம் கோர்ட் தடை செய்திருந்தாலும் தடையை மீறி போராட்டத்தை தொடர்வோம் என்று ஒருபுறம் திமுகவினர் அறிவித்த நிலையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு மதிப்பு கொடுத்து இன்று நடைபெறவிருந்த ஆர்பாட்டத்தை ரத்து செய்யப்படுவதாக தினகரன் அறிவித்துள்ளார். 
 
இதுகுறித்து தினகரன் தனது டுவிட்டரில் கூறியதாவது, 'நீட் எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு  அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இருப்பினும், நீதிமன்ற தீர்ப்பை மதித்து கழகத்தின் சார்பில் நடைபெறவிருந்த நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது” என்று கூறினார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்