ஒரு ஓட்டுக்கு 3 முதல்வர் - ஸ்டாலின் விளாசல் (வீடியோ)

ஞாயிறு, 21 மே 2017 (15:37 IST)
காஞ்சிபுரம்  மாவட்டம், ஆலந்தூர் தொகுதி, தண்டலம் வடிவுடையம்மன் கோவில் குளத்தை திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர் கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு  தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.  அந்த பகுதியில் இருந்த  அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். இந்த நிகழ்ச்சியானது தாமோ.அன்பரசன், தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. 


 

 
இதில் கலந்து கொண்ட தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மேடையில் பேசுகையில் : தண்டலம் தூர்வாரும் பனியை சிறப்பாக நடைபெற்று உள்ளது. ஒரு வாரத்தில் முடிவடையும் என்ற நம்பிக்கையில் இந்த பணி ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள் ஈடுபடவேண்டும் என்பதுதான் உண்மை, அவர்களுக்கு விருப்பம் இல்லை, மனம் இல்லை என்று சொல்வதா அதற்கான நேரம் இல்லை என்று சொல்வதா, அவர்கள் கட்சியில் உள்ள தூரை எடுக்கும் பணியில் உள்ளனர். திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடும் என்பதற்கு சான்று இது. தூர்வாரும் பணி நடைபெற்று உள்ளதா என்று கேட்டேன். தமிழகம் தண்ணீருக்கு தலை விரித்து ஆடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக எதிர் கட்சியாக உள்ளது.
 
மக்களை ஆளும் கட்சியாக திமுக தான் உள்ளது. தமிழகம் 89 சட்டமன்ற தொகுதியில் மட்டும் அல்ல அனைத்து பகுதிகளிலும் நடைபெறுகிறது. சில கட்சியின் தலைவர்கள் இந்த பணியை கொச்சை படுத்தி கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் விமர்சனம் செய்கின்றனர். விமர்சுனம் எங்கள் பணிக்கு ஊக்கமாக எடுத்துக் கொள்வோம். ஆட்சியில் இருப்பவர்கள் டெல்லிக்கு சென்று நாடகம் நடத்துகின்றனர். ஒரு ஓட்டுக்கு 3 முதல்வர் பார்த்த நாடு தமிழகம் விரைவில் தி.மு.க ஆட்சிக்கு வரும்.
 
கட்சியை பதவி காப்பாற்றி கொள்ள அந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். பன்னீர்செல்வம் மோடியை பார்க்கிறார். தற்போது அவர் எந்த பொறுப்பிலும் இல்லை அவருக்கு நேரம் கொடுக்கப்படுகிறது. விவசாய பிரச்சினை ஏற்பட்டுள்ளது தெரியும் 200க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டனர். டெல்லியில் நிர்வாண போராட்டம் நடத்தினார்கள் அவர்களை சந்திக்க மோடிக்கு நேரம் இல்லை, தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி கூட்டம் கூட்டினோம் மோடியிடம் நேரடியாக சென்று கொடுக்கும் தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால் எந்த பதிலும் வரவில்லை.
 
குறிப்பாக நேற்று தான் கரூரில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆங்காங்கே ஏரியை தூர்வாரியதினால் தான் ஏரி நிறைந்து வழிகின்றது என்றும் தி.மு.க வெறும் விளம்பரத்திற்காகவும், பேப்பரில் வரும் செய்திக்காக மட்டுமே தூர்வாருவதாக கூறினார். 
 
இதையடுத்து கரூர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு காஞ்சிபுரத்தில் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சில கட்சியை சார்ந்தவர்கள் தி.மு.கவினர் செய்யும் இந்த தூர்வாரும் பணியினை விமர்சனம் செய்கின்றனர். ஆனால் செய்கின்ற பணிகளை பாராட்டக்கூட வேண்டாம்,. அந்த விமர்சனம் செய்யாமல் இருக்கலாம் அல்லவா?

தி.மு.க வை பார்த்து விமர்சனம் செய்பவர்களை பார்த்து கேட்டுக் கொள்கின்றேன். மேலும் மேலும் நீங்கள் விமர்சனம் செய்தால் தான் நாங்கள் வளர்ந்து கொண்டு இருக்கின்றோம், ஏதோ போட்டோவிற்கு போஸ் கொடுக்க என்றெல்லாம் சொல்கின்றார். தற்போது அரசியலுக்கும், பதவிக்கும் வந்தவர்கள் எல்லாம் சொல்கின்றனர் தி.மு.க நாடகம் நடத்துகின்றது என்று. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக செம்மையான வேலையை செய்வது திராவிட முன்னேற்றக்கழகத்தின் பணி. மேலும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போல அரசியல் கட்சியினர் சொல்லும் விமர்சனங்களுக்கு கருத்துக் கூறவில்லை என்று ஒட்டு மொத்த அரசியல் கட்சியினரும் செய்யும் விமர்சனங்கள் எங்களுக்கு பச்சைக்கொடி காட்டுவது போல தான் உள்ளது என்று மு.க.ஸ்டாலின் கூறி முடித்தார்.

சி.ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்

வெப்துனியாவைப் படிக்கவும்