நேற்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ கூட்டத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அவரே முதல்வராக வேண்டும் என தற்போதைய தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்தார். மேலும், தனது ராஜினாமா கடிதத்தையும் அவர் ஆளுநருக்கு அனுப்பியுள்ளார். வருகிற 9ம் தேதி தமிழகத்தின் முதல்வராக சசிகலா பதவியேற்பார் எனக்கூறப்படுகிறது.
இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக, ஜெ. அனுமதிக்கப்பட்டது முதல் மரணமடைந்த வரை, சசிகலாவிற்கு எதிராக கருத்து தெரிவித்தவரான ஜெ.வின் தோழி கீதா, தமிழக முதல்வராக சசிகலா நியமிக்கப்படவுள்ளது பற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போது “ இப்படி அவசரமாக முதல்வராக வேண்டிய அவசியம் சசிகலவிற்கு ஏன் வந்தது எனத் தெரியவில்லை. தேர்தலில் நின்று வெற்றி பெற்ற பின் அவர் முதல்வராக வர வேண்டும்.
முதல்வர் பதவியில் இருந்து பன்னீர் செல்வம் விலகுவது அவருக்கு நல்லதுதான். ஏனெனில், சசிகலா குடும்பத்தினர் செய்யும் ஊழலுக்கு இவர் சிக்க வேண்டியதாகிவிடும். ஏற்கனவே, அவர்கள் செய்த ஊழலுக்காகத்தான் ஜெயலலிதா சிறையில் இருந்தார். சசிகலாவை மக்கள் தூக்கி எறிவார்கள்” என அவர் கூறினார்.