டிடிவி தினகரன் அடுத்த முதலமைச்சரா? - ஒதுங்கும் பின்னணி என்ன?

புதன், 15 மார்ச் 2017 (12:08 IST)
எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக ஆட்சி புரிந்து வருகிறார். அவர்தான் முதல்வர்; எனக்கு அந்த விருப்பம் இல்லை என்று அதிமுக சட்டமன்ற அவைத் தலைவரும், ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக வேட்பாளருமான டிடிவி தினகரன் கூறியுள்ளார்.


 

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்ட முடிவில் ஆர்.கே.நகர் தொகுதி கட்சியின் அவைத் தலைவர் அதிமுக வேட்பாளராக டிடிவி தினகரன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன், “ஜெயலலிதா இரண்டு முறை வெற்ற பெற்ற ஆர்.கே. நகரில் போட்டியிடுவது பெருமையாக இருக்கிறது.

50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே.நகரில் வெற்றி பெறுவேன். எங்களை பொறுத்தவரை திமுகவைத்தான் எதிர்க்கட்சியாக நினைக்கிறோம்.

இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம். அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தல், அதனைத் தொடர்ந்து வரும் சட்டமன்றத் தேர்தலிலும் இரட்டை இல்லை சின்னத்தில்தான் போட்டியிடுவோம்” என தெரிவித்தார்.

பின்னர், செய்தியாளர்கள் முதல்வர் பதவிக்கு குறிவைக்கிறீர்களா? என கேள்வு எழுப்பினர்.

அதற்கு பதலளித்த தினகரன், “அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக ஆட்சி புரிந்து வருகிறார். அவர்தான் முதல்வர்; எனக்கு அந்த விருப்பம் இல்லை” என கூறினார்.

ஏற்கனவே, சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி, தீபா அணி என பிரிந்து இருக்கும் நிலையில் தனக்கு முதலமைச்சர் ஆசை இருக்கிறது என்று கூறி மேலும் ஒரு அணியை உருவாக்க விரும்ப மாட்டார் என்று அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்