சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளரை தேர்வு செய்வதிலும், சிறு கட்சிகளின் ஆதரவை பெறுவதிலும் தீவிரமாக உள்ளது. குறிப்பாக மக்கள் நலக்கூட்டணியின் ஆதரவை பெறுவதற்கு திமுகவும் ஓபிஎஸ் அணியும் முயற்சி செய்து வருகின்றன
சமீபத்தில் ஜி.கே.வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை செய்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், ஓபிஎஸ் அணியின் வேட்பாளரை அறிவித்தவுடன் தனது முடிவை அவர் வெளிப்படையாக அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மக்களின் ஆதரவு பன்னீர்செல்வத்திற்கு இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தமிழ் மாநில காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. ஜி.கே.வாசனின் இந்த அதிரடி முடிவால் திமுக அதிர்ச்சி அடைந்துள்ளது.