இந்நிலையில் திமுக இளைஞர் அணி இணை செயலாளராக இருந்த மு.பெ.சாமிநாதனை திமுகவின் இளைஞர் அணி செயலாளராக திமுக தலைமை அறிவித்துள்ளது. மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர். திமுகவின் வாக்கு பலவீனமாக உள்ள கொங்கு மண்டலத்தை சேர்ந்த சாமிநாதனுக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி அளிக்கப்பட்டு இருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.