கட்சியின் மீது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 2001ம் ஆண்டு, திமுகவிலிருந்து விலகி, அதிமுகவிற்கு சென்றார். அதன்பின் சில ஆண்டுகள் கழித்து, மீண்டும் திமுகவிற்கே திரும்பினார். பல பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி வந்தார்.
இந்நிலையில், கல்லீரல் மற்றும் சர்க்கரை நோயால் அவதிப்பட்ட அவர் கடந்த சில வருடங்களாக கட்சிப் பணியில் தீவிரம் காட்டாமல் இருந்து வந்தார். மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, நேற்று இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.