வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளாரா கருணாநிதி?

திங்கள், 30 ஜனவரி 2017 (11:35 IST)
திமுக தலைவர் கருணாநிதி வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசிய விவகாரம் திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
உடல் நலக்குறைவு காரணமாக, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாநிதி கடந்த டிசம்பர் மாதம் 23ம் தேதி வீடு திரும்பினார். அதன்பின் அவர் எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. அவர் பெயரில் எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.
 
திமுகவின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் நியமிக்க நடந்த பொதுக்கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை. அவர் ஓய்வில் இருப்பதால் அவரை சந்திக்க தொண்டர்கள் வர வேண்டாம் என திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அந்நிலையில், கருணாநிதி இன்னும் 15 நாட்களில் மக்கள் பணியாற்ற வருவார் என திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கடந்த 25ம் தேதி கூறினார்.
 
இந்நிலையில், சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,  கருணாநிதி வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு புகார் கூறினார். அத்துடன் கிளாடியேட்டர் படத்தில் அரச பதவிக்காக, மகனே தந்தையை கொலை செய்யும் காட்சியையும் அவர் குறிப்பிட்டு பேசினார்.
 
இந்த விவகாரம் திமுக வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்