செவ்வாய்கிழமையோடு முடிகிறதா சசிகலா ஆட்டம்? சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு

ஞாயிறு, 12 பிப்ரவரி 2017 (10:17 IST)
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில், சுப்ரீம் கோர்ட்டில் வருகிற செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


 
 
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு விதித்த சிறை தண்டனையையும், அபராதத்தையும் கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்தது.
 
இதை எதிர்த்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இதேபோல் தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 
 
இந்தநிலையில், இந்த வழக்கில் வருகிற செவ்வாய்க்கிழமை நீதிபதிகள் தீர்ப்பு வழங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்