ஏற்கனவே கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகளிடம் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்த நிலையில், அதில் திருப்தி அடையாத அதிகாரிகள், வருகிற 17ம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என விஜயபாஸ்கருக்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இதனால் அதிருப்தி அடைந்த 20க்கும் மேற்பட்ட அதிமுக அமைச்சர்கள் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இல்லாவிடில் அமைச்சர்களின் பலரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடக்கும். இதனால் ஆளும் அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழப்பார்கள் என துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் முறையிட்டதாக தெரிகிறது. மேலும், அதிருப்தி அமைச்சர்களுடன் தினகரனை இன்று மாலை சந்தித்த தம்பிதுரை, விஜயபாஸ்கரை ராஜினாமா செய்ய வைப்பது குறித்து விவாதித்தாக தெரிகிறது.
தமிழ் புத்தாண்டிற்கு வாழ்த்து சொல்லத்தான் அமைச்சர்கள் என்னை தேடி வந்தனர். நாங்கள்தான் சந்தோஷமாகத்தான் பேசிக் கொண்டிருந்தோம். விஜயபாஸ்கருக்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர் என்று வெளியான செய்தி வெறும் வதந்தியே. அவர் மீது எந்த தவறும் இல்லை. எனவே, அவர் பதவியிலிருந்து நீக்கப்படமாட்டார். அதபோல், அமைச்சரவையிலும் எந்த மாற்றமும் இல்லை” என அவர் தெரிவித்தார்.