பேரவையை தொடங்கியதுமே பிரச்சனை - சமாளிப்பாரா தீபா?

திங்கள், 27 பிப்ரவரி 2017 (13:02 IST)
தீபா பேரவையில் செயலாளராக நியமிக்கப்பட்டவருக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பேரவையை தொடங்கியதுமே, பிரச்சனையை சந்திக்கும் நிலையில் தீபா தள்ளப்பட்டுள்ளார்.


 

 
பல்வேறு அறிவிப்புகளுக்குப் பின், ஜெ.வின் பிறந்தநாளான கடந்த 24ம் தேதி எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையை தொடங்கினார். அதேபோல், பேரவைக்கு புதிய நிர்வாகிகளையும் அறிவித்தார். பேரவையின் செயலாளர் பதவியில் ராஜா என்பவரை நியமித்தார். ஆனால், தீபா பேரவையில், பலருக்கு பதவி வாங்கி தருவதாக கூறி ராஜா மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அவரிடம் பணம் கொடுத்த பலர் தியாகராய நகரில் உள்ள தீபாவின் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ராஜாவை செயலாளராக ஏற்க முடியாது என அவர்கள் குரல் எழுப்பினர். 
 
இதனால், ராஜாவை அந்த பதவியிலிருந்து நீக்கியதோடு, தற்காலிகமாக செயலாளர் பதவியை தானே ஏற்பதாக தீபா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், விரைவில் வேறு ஒருவர் அந்த பதவிக்கு நியமிக்கப்படுவார் எனவும் அவர் அறிவித்தார். 
 
அரசியலில் தீபா இன்னும் பல தூரங்களை கடக்கவுள்ளது. பல சிக்கல்களை அவர் சந்திக்கவேண்டியிருக்கும். ஆனால், அவற்றையெல்லாம்  அவர் எப்படி வெற்றிகரமாக முறியடிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் அவரின் எதிர்கால அரசியல் அமைய உள்ளது என சமூக வலைத்தளங்களில் கருத்துகள் உலவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்