தீபா-மாதவன் கைகலப்பா? பேரவை நிர்வாகிகள் அதிர்ச்சி

செவ்வாய், 21 மார்ச் 2017 (07:22 IST)
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, உண்மையான ஜெயலலிதா வாரிசு என்றும், அதிமுகவின் அடுத்த தலைவர் என்றும் கூறிக்கொண்டிருந்தார். இந்நிலையில் தனக்கு மக்கள் செல்வாக்கு அதிகமாக உள்ளது என்று கூறிக்கொண்ட தீபா, ஓபிஎஸ் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று முதலில் கூறினார். பின்னர் ஓபிஎஸ் இடம் தனது பேரம் படியாததால் எம்ஜிஅர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார்.




ஆரம்பத்தில் இந்த பேரவைக்கு ஓரளவு வரவேற்பு இருந்தாலும், ஒரே மாதத்தில் அவரது கணவர் மாதவன் பேரவையில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பிக்கவுள்ளார். தீபா பேரவை நிர்வாகிகள் நியமனத்தில் ஏற்பட்ட கருத்துவேறுபாடே இந்த பிரிவுக்கு காரணம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் தீபா பேரவையின் எதிர்காலம் கருதி இருவரையும் சமாதானப்படுத்த ஒருசிலர் சமீபத்தில் முயற்சித்தனர். ஆனால் இந்த சமாதான முயற்சியில் தீபாவுக்கு அவருடைய கணவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டதாக முன்னணி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியால் அதிர்ச்சி அடைந்த தீபா பேரவையினர் கொஞ்சம் கொஞ்சமாக ஓபிஎஸ் அணிக்கு மாறி வருகின்றனர். ஆர்.கே.நகர் தேர்தலுக்குள் தீபாவின் கூடாரம் காலியாகிவிடும் என்று கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்