அதிமுக கட்சியின் பெயரும், அக்கட்சியின் சின்னமான இரட்டை இலையும் முடங்கியிருப்பதால், சின்னத்தை கைப்பற்றா ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் தீவிர முயற்சிகள் எடுத்து வருகின்றன. இரு அணி தலைவர்களும் தேர்தல் ஆணைய அலுவலகத்த்ஹில் பிரமாண பத்திரங்களை மாறி மாறி தாக்கல் செய்து வந்தனர்.
இதேபோல் நேற்று ஓபிஎஸ் அணியினர்களும் ஒரு மினி லாரியில் ஆவணங்களை திணித்துக் கொண்டு வந்து தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கொடுத்துச் சென்றனர். ஜூன், 16ம் தேதி வரை, ஆவணங்களைத் தாக்கல் செய்ய இரு அணிகளுக்கும் தேர்தல் ஆணையம் அவகாசம் கொடுத்துள்ளதால் இன்னும் எத்தனை முறை, இரு அணியினரும், தேர்தல் கமிஷனுக்கு, லாரி பிடித்து வரப்போகிறார்களோ என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஒருவித அச்சத்துடன் இருக்கின்றனர். இரு அணியினர்களும் கொடுத்த ஆவணங்கள் மலைபோல் குவிந்துவிட்டதாகவும், இவற்றை சரிபார்க்கவே மாதக்கணக்கில் ஆகும் என்றும் அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.