வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை - மழைராஜ்

திங்கள், 14 பிப்ரவரி 2011 (20:51 IST)
தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதால் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு செய்து வரும் மழைராஜ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு வருமாறு :

கடந்த ஒன்றரை மாதத்திற்கு மேல் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவுகிறது. இந்நிலையில், பிப்ரவரி 14ஆம் தேதி கணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் பாம்பனை மையமாகக் கொண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளது.

இதனால் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட தென் தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் பிற கடலோர மாவட்டங்களிலும், தென் தமிழகத்தின் சில பகுதிகளிலும் இலேசானது முதல் மிதமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. பாம்பன் பகுதியில் கடல் சீற்றம் கூடுதலாக காணப்படும்.

நிலநடுக்க தேதி கணிப்பின்படி பிப்ரவரி 16 பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்