மீண்டும் தீவிர மழை பெய்ய வாய்ப்பு - மழைராஜ்

வெள்ளி, 11 நவம்பர் 2011 (18:14 IST)
தற்போதைய வானிலை கணிப்பின்படி நவம்பர் 13 முதல் மீண்டும் தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:

வடகிழக்குப் பருவ மழை கடந்த 6ஆம் தேதி வரை தீவிரமான பெய்தது. கடந்த 4 நாட்களாக பருவ மழையின் தாக்கம் குறைந்து அதிக அளவில் பனிப் பொழிவு காணப்படுகிறது. பகலில் வானம் தெளிவாக இருப்பதுடன் வெயிலின் தாக்கமும் அதிகமாக உள்ளது.

இந்நிலையில், நவம்பர் 10ஆம் தேதி வானிலை கணிப்பின்படி, நவம்பர் 13 முதல் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைய வாய்ப்புள்ளது. நவம்பர் 13 முதல் 17 வரை கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் மீண்டும் பருவ மழை தீவிரமடைய வாய்ப்புள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்