தற்போதைய வானிலை கணிப்பின்படி பருவ மழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும், மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் மழை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:
செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி வானிலை கணிப்பின்படி தென்மேற்கு பருவ மழை தீவிரமடையும் வாய்ப்புள்ளது. இதனால் செப்டம்பர் 7 முதல் 10ஆம் தேதி வரை கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், சென்னை உட்பட வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி உட்பட தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் பலத்த மழையும், காவிரி டெல்டா மாவட்டங்கள், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உட்பட தமிழகத்தின் பிற பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமானது முதல் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மழை தேதியின் கணிப்பின்படி செப்டம்பர் 14 முதல் 19 வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ள தேதிகளாகும். வானிலை கணிப்பின்படியும், நிலநடுக்க கணிப்பின்படியும் செப்டம்பர் 10, 19 ஆகிய தேதிகளில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.