பருப்பு வகைகள் உற்பத்தி உயர்ந்துள்ளது: மத்திய அரசு
செவ்வாய், 8 பிப்ரவரி 2011 (17:34 IST)
புதிய சாகுபடி முறைகளாலும், நல்ல மழையினாலும் இந்த ஆண்டு இந்தியாவின் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி உயர்ந்துள்ளது என்றும், இதனால் இறக்குமதி பாதியாக குறையும் என்றும் மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு பருப்பு வகைகள் உற்பத்தி மட்டும் 1.66 கோடி டன்களைத் தாண்டும் என்றும், இதனால் தற்போது ஆண்டுக்கு 9 இலட்சம் டன் அளவிற்கு இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகள், பாதியாக குறையும் என்று வர்த்தக அமைச்சகச் செயலர் ராகுல் குல்லர் கூறியுள்ளார்.
இதேபோல் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியும் அதிகரித்துள்ளதென குல்லர் கூறியுள்ளார்.