பட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில், மல்பரி நடவு செய்யும் விவசாயிகளுக்கான மானியத் தொகையை தமிழக அரசு உயர்த்தி உள்ளது.
இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் இன்று அறிவிப்பை வெளியிட்டார்.
இதன்படி மல்பரி நடவு செய்யும் விவசாயிகளுக்கு மானியத் தொகை ரூ.6,750ஆக உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.
நடப்பாண்டில், 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மல்பரி நடவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர், இதற்கான மானியமாக 3 கோடியே 37 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், பட்டு உற்பத்தியை பெருக்க நவீன தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்களைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு தற்போது வழங்கப்படும் 30 ஆயிரம் ரூபாய் மானியம், இனி 37 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார்.