கேரள, கர்நாடக மாநிலங்களில் பரவலாக பொழிந்துவரும் தென்மேற்கு பருவமழை, வட இந்திய மாநிலங்களான உத்தரப் பிரதேசம், இராஜஸ்தான் மாநிலங்களில் எதிர்பார்த்த காலத்திற்கு முன்னரே பெய்யத் தொடங்கியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கரும்பு அதிகம் பயிர் செய்யப்படும் மேற்கு உத்தரபிரதேசத்திலும், பருப்பு வகைகளை அதிகம் பயிரிடும் இராஜஸ்தானிலும், கோதுமை பெருமளவிற்கு சாகுபடி செய்யப்படும் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலும் பரவலாக பொழியத் தொடங்கியுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நெல், கரும்பு, சோளம், கோதுமை உள்ளிட்ட பயிர்களுக்குத் தேவையான மழையை ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் தென் மேற்கு பருவ காற்றே அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.