தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு செய்துவரும் மழைராஜ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு வருமாறு :
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 20 முதல் 24ஆம் தேதி வரை சென்னை உள்பட ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்தது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவி வருகிறது.
இந்நிலையில் மார்ச் 13ஆம் தேதி கணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நாகைக்கு தென்கிழக்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளது.
இதனால் மார்ச் 14 முதல் 17ஆம் தேதி வரை ராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த மழையும், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம், ஈரோடு, தர்மபுரி, கரூர், திருவண்ணாமலை, நீலகிரி உட்பட பெரும்பாலான இடங்களில் மிதமானது முதல் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நிலநடுக்க தேதி கணிப்பின்படி மார்ச் 15, 18, 25 மற்றும் ஏப்ரல் 3 ஆகிய §திகளில் இரண்டு தேதிகளில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.