தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு செய்துவரும் மழைராஜ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு வருமாறு :
ஜனவரி 26ஆம் தேதி கணிப்பின்படி ஜனவரி 27 முதல் 30 ஆம் தேதி வரை மிதமானது பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் பாம்பனை மையமாகக் கொண்டு உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கன்னியாகுமரி, ராமேஸ்வரம், புதுக்கோட்டை, காவிரி டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரி, சென்னை உட்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிலும் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நிலநடுக்க தேதியின் கணிப்பின்படியும், வானிலை கணிப்பின்படியும் ஜனவரி 30ஆம் தேதிக்குள் பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது ரஷ்யா அல்லது ஜப்பானாக இருக்க வாய்ப்புள்ளது என்று மழைராஜ் தெரிவித்துள்ளார்.