தமிழ்நாட்டின் ஒப்புதலுடன் புதிய அணை கட்டுவோம்: உம்மன் சாண்டி
புதன், 1 ஜூன் 2011 (17:53 IST)
முல்லைப் பெரியாறு அணை இருக்கும் இடத்தில், தமிழ்நாட்டின் ஒப்புதலைப் பெற்று புதிய அணை கட்ட முயற்சி மேற்கொள்வோம் என்று கேரளத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள உம்மண் சாண்டி கூறியுள்ளார்.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் உம்மண் சாண்டி, “தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதே நேரத்தில் கேரள மக்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது” என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டுடன் நல்லுறவும் தொடரும் புதிய அணையும் கட்டப்படும் என்று கூறிய சாண்டி, தமிழ்நாட்டின் ஒப்புதலுடன் புதிய அணை கட்ட முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.