வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைந்து வருவதால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில்,
மார்ச் 8ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில், மார்ச் 10, 11 மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தேன். ஒரு நாள் தாமதமாக மார்ச் 11ஆம் தேதி முதல் மழை பெய்து வருகிறது.
மார்ச் 14ஆம் தேதி வானிலை கணிப்பின்படி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் தொண்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை தீவிரமடைந்து வருகிறது.
இதனால் இராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, கன்னியாகுமரி, காவிரி டெல்டா மாவட்டங்களிலும், சென்னை, புதுச்சேரி, கடலூர் உட்பட கடலோர மாவட்டங்களிலும், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் மார்ச் 19ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மார்ச் 10ஆம் தேதி பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்திருந்தேன், மார்ச் 9ஆம் தேதி ஆஸ்ட்ரேலியா அருகே உள்ள வானாடு பகுதியில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.