இரண்டாவது பசுமைப் புரட்சி தேவை: பொருளாதார ஆய்வறிக்கை

சனி, 26 பிப்ரவரி 2011 (14:31 IST)
நாட்டின் வேளாண் உற்பத்தியைப் பெருக்க 1960ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சி போன்று, மீண்டும் ஒரு பசுமை புரட்சி தேவை என்று பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் மக்கள் தொகை 100 கோடியைத் தாண்டியுள்ள நிலையில், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய நாட்டின் வேளாண் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்றும், அதனை உறுதி செய்ய இரண்டாவது பசுமைப் புரட்சி வேண்டும் என்றும் கூறியுள்ள பொருளாதார ஆய்வறிக்கை, நமது நாட்டின் விவசாயிகளும், வேளாண் விஞ்ஞானிகளும் இணைந்து அம்முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நிதியாண்டில் இதுவரை காணாத அளவிற்கு 8.147 கோடி டன் கோதுமை உற்பத்தியாகியுள்ளது, பருப்பு வகைகள் 1.651 கோடி டன்களும், பருத்தி 3.393 கோடி டன்களும் உற்பத்தியாகியுள்ளதென்றும், நாட்டின் பல பகுதிகளில் வறட்சியும், மழை வெள்ளம் காரணமாக வேளாண்மை பாதிக்கப்பட்டும் இந்த அளவிற்கு உணவு உற்பத்தியை நாடு எட்டியுள்ளதென பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்