மணிமுத்தாற்றில் இருந்த நீர் திறந்துவிட முதல்வர் உத்தரவு
செவ்வாய், 24 மே 2011 (19:49 IST)
அம்பாசமுத்திரம் பகுதியில் 1,258 ஏக்கர் நிலத்திற்கு பாசனம் அளிக்கும் வகையில் மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணையில் தற்போது 1.06 டி.மெ.சி. தண்ணீர் உள்ளது. இதில் அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள நிலங்களுக்கு பெருங்கல் கால்வாய் வழியாக நீரைத் திறந்துவிட முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
எவ்வளவு நீர் திறந்துவிடுவது என்பது தேவைப் பொறுத்து முடிவு செய்யப்படும் என்று அச்செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
ஏற்கனவே மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு ஜூன் 6ஆம் தேதி முதல் தண்ணீர் திறுந்துவிடுமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.